Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கதர் உற்பத்தியாளர்கள் மற்றும் நூற்பாளர்களுக்கு ஊக்கத் தொகை ~ ஜெ உத்தரவு

கதர் உற்பத்தியாளர்கள் மற்றும் நூற்பாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், கதர் துணி வகைகளுக்கு அரசால் வழங்கப்படும் தள்ளுபடி மானியத்தால் நுகர்வோரே அதிக பயன்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் கதர் உற்பத்தியாளர்களான நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களும் பயன்பெறும் வண்ணம் இந்த ஆண்டு முதல் 20 விழுக்காடு ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் 5 விழுக்காடு கதர் உற்பத்தியாளர்களுக்கும் மீதமுள்ள 15 விழுக்காடு கதர் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிப்பதற்காகவும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் இந்த திட்டத்தினால் அரசுக்கு ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post