Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காங்கிரஸ் – பாஜக வார்த்தை மோதல் முற்றியது

செய்தி ஊடகங்களில் அன்றாடம் தலைப்புச் செய்தியாக இடம்பிடிப்பது ஊழலே. காங்கிரசும், பாரதிய ஜனதாவும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் ஊழல் புகார் கூறுவதோடு, குற்றச்சாட்டை நிரூபிக்கத் தயாரா என்று சவால் விடவும் தவறுவதில்லை. அந்த வகையில், நேற்று இரு கட்சியினருக்கும் இடையே வார்த்தை போர் முற்றியது. 

“ஊழலுக்கு எதிராக பாஜக இல்லை” : நவம்பரில் புதுக்கட்சி தொடங்கும் அர்விந்த் கெஜ்ரிவால் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மீதும், பாரதிய ஜனதா மீதும் ஊழல் புகார்களை அடுக்கடுக்காக தொடுத்து வருகிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், தங்களிடம் கேள்விக் கணைகளை தொடுக்கும் முன்பு கெஜ்ரிவாலின் தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்படும் விதம் பற்றி அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஊழல் விவகாரத்தில் பாரதிய ஜனதா தலைவர்களுக்கு எந்தவித சலுகைகளும் அளிக்கப்படவில்லை என்றும் அக்கட்சி கூறியுள்ளது. 

இமாச்சலப் பிரதேச மாநிலம் மான்டி நகரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ஊழலுக்கு எதிராக போராடுவதை விட காங்கிரசுக்கு எதிராக செயல்படுவதையே பாரதிய ஜனதா பிரதான நோக்கமாக கொண்டிருப்பதாக விமர்சித்தார். பாரதிய ஜனதா கட்சியினர் ஊழல் குறித்து அதிகமாக பேசுகின்றனர். 


ஆனால், அக்கட்சி ஆட்சியில் இருக்கும மாநிலங்களில் ஊழல் மலிந்துள்ளது. ஊழலை ஒழிப்பதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? ஊழல் குறித்து அவர்கள் பேசுவது பொதுமக்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்கே. அவர்கள் ஊழலுக்கு எதிராக அல்ல, காங்கிரசுக்கு எதிராகவே செயல்படுகின்றனர் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் விமர்சித்திருந்தார். “சோனியா மவுனம் காப்பது ஏன்?” : வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் உறவினர்கள் மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. 


நாட்டின் பிரதமர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருப்பது அவசியம் என்று கூறியுள்ள பாரதிய ஜனதா, 2ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரிச் சுரங்கம், காமன்வெல்த் போன்ற ஊழல் புகார்கள் குறித்தும், மருமகன் வத்ரா மீதான முறைகேடு புகார் குறித்தும் சோனியாகாந்தி வாய் திறக்க மறுப்பது ஏன் என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

பன்னாட்டு குடிநீர் நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க பெரிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும். சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்னையை எழுப்புவதோடு நில்லாமல், விவசாயிகளின் நலனைக் காக்க பாஜக போராட்டத்திலும் இறங்கும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார். 

பிரதமரிடம் விசாரிக்க வலியுறுத்தல் : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மன்மோகன்சிங்கையும், சோனியாகாந்தியையும் அழைக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக, அக்குழு தலைவரான பி.சி.சாக்கோவுக்கு, குழு உறுப்பினரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post