Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கேப்பாபிலவு மக்கள் தமது நிலங்களை மறந்து விட வேண்டுமாம் – வன்னிப் படைத்தளபதி சொல்கிறார்

மகாவலி அபிவிருத்தித் திட்டத்துக்காக சொந்த இடங்களில் இருந்து அகற்றப்பட்டு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட மக்களைப் போலவே, கேப்பாபிலவு மக்களுக்கும் தமது சொந்த நிலங்களை மறந்து விடவேண்டும் என்று கூறியுள்ளார் வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா. 

"இந்த மக்கள் இடம்பெயர்ந்த மக்கள் அல்ல, அவர்களை நாம் வேறு இடங்களில் குடியமர்த்தி விட்டோம். 

நாட்டின் மிகப்பெரிய கரிசனைக்குரிய விடயம் பாதுகாப்பு தான். 

அதில் தான் நாம் கவனம் செலுத்துகிறோம்.  இதனால் நன்மை எல்லோருக்கும் தான். 

சூரியபுரத்தில் இவர்களுக்கு நாம் சுகாதார, குடிநீர் வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். 

இந்த மக்களுக்கு வீடுகளை அமைக்கும் முயற்சியில் இப்போது இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. 

மகாவலித் திட்டத்தின் போது, மலையகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டனர். அதை அந்த மக்கள் இப்போது மறந்து விட்டார்கள். 

தெல்தெனிய கிராமமே நீரில் மூழ்கியது. மக்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். 

அந்த நடவடிக்கை நாட்டின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட்டது. இது பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படுகிறது.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post