Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அடுத்த வாரம் வெளியாகவுள்ள விஜயின் "துப்பாக்கி" படப் பாடல்கள்.


"துப்பாக்கி"படத்திற்கான தலைப்பிற்காக போடப்பட்ட வழக்கு இன்னும் இழுபறியில் உள்ள நிலையில்,இப்படத்தின் இருவேறு புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.ஒன்றில் காஜல் அகர்வால் மற்றும் விஜய் இருப்பது போலவும்,மற்றயதில் விஜய் மட்டும் இருப்பது போலவும் அவை உள்ளன.

அடுத்த வாரத்திற்குள் இப்படத்திற்கான பாடல்கள் வெளியிடும் நிகழ்வு நடக்கக்கூடும்  என எதிர்பார்க்கப்படுகிறது.அத்தோடு முன்னோட்டக் காட்சியையும் மிக ஆவலாக எதிர்பார்த்துள்ளனர் விஜய் இரசிகர்கள்.

இப்படத்தில் வரும் இரண்டு பாடல்களுக்கு வரி எழுதியுள்ளார் மதன் கார்கி."கூகிள் கூகிள்...." , என்றும் "அந்தார்டிக்கா.." என்றும் தொடங்குகின்றன அப்பாடல்கள்.

"கூகிள் கூகிள்.." என்று அமையும் பாடல் இப்படத்தில் வரும் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும்  வகையில் அமையவுள்ளது.இப்பாடலுக்கு விஜயுடன் ஆட்டம் போடவுள்ளார் ஆண்ட்ரியா..

"அந்தார்டிக்கா...."என்ற பாடல் இராணுவ வீரரின் வாழ்வில் உள்ள காதலை எடுத்துரைக்கும் பாடலாக அமையவுள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post