Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சமையல் எரிவாயு விலை ஏற்றம். மம்தா பானர்ஜி கண்டனம்



மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அரசின் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது  முகநூல் சமூக வலைத்தளத்தில்  அவர் கூறியிருப்பதாவது:- ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மக்களின் நலனை பாதிக்கும் இந்தவிலை ஏற்றத்தை எந்தனை முறை செய்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? மத்திய அரசு ஒரு சிலிண்டருக்கு 11.42 பைசா உயர்த்தியிருப்பது மிக கெட்ட மற்றும் மிக மோசமான நடவடிக்கை ஆகும். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகியதிலிருந்தே, மம்தா பானர்ஜி மத்திய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post