Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மின்வெட்டைக் கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டைக் கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.


நாமக்கல் மாவட்ட சுற்றுப்பகுதிகளில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் 100-க்கும் மேற்ப்பட்டோர் மின்வெட்டைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.இவர்களுடன் அதே பகுதியை செர்ந்த விவசாயிகளும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.இதேபோல் விருதுநகர் மாவட்டத்தைச் செர்ந்த 500-க்கும் மேற்ப்பட்ட விசைத்தறி உரிமையாளர்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் தொடர் மின்வெட்டால் எங்கள் வாழ்க்கை பாதிக்கபடுகின்றது எனவும் தமிழக அரசு இதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்தனர். தமிழகத்தில் தொடர் மின்வெட்டால் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும்.
[vuukle-powerbar-top]

Recent Post