Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தனி விமான சேவையை தொடங்குகிறது கேரளா. தமிழ்நாடு இதை பின்பற்றுமா ?




கேரள அரசுக்கு , கேரளா மாநிலத்திற்கு என்று சொந்தமாக விமான சேவையை ஏப்ரல் மாதம் 2013 ஆம் ஆண்டு கேரள அரசு அறிமுகப் படுத்த உள்ளது. வரும் மலையாள ஆண்டின் துவக்கத்தில் ஏர் கேரளா என்ற  விமான சேவையை தொடங்கப்படும் என்று கேரள முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக இந்த சேவை இந்தியாவில் மட்டுமே இயக்கப்படும் என்றும் , போதுமான விமானங்கள் வாங்கிவிட்டால் பின்பு சர்தேச அளவில் கேரள விமானங்கள் இயக்கப்படும் என்றும் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். 

ஹிந்தியை மட்டுமே முதன்மை படுத்தி, மற்ற இந்திய மொழிகளுக்கு இடம் தராமல் இயங்கி வரும் இந்திய விமான சேவைக்கு இந்த மலையாள விமான சேவை மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த விமான சேவையை தொடங்குவதற்கு முழு ஒத்துழைப்பையும், நிதியையும் வழங்கியது வெளிநாட்டு வாழ் கேரள மக்கள் தான் என்பது குறிப்பிடத் தக்கது. 
2004 ஆம் ஆண்டு முதலே இதற்கான ஆயத்தப் பணியில் இவர்கள் ஈடுபட்டனர்.  இதன் மூலம் மலையாளிகள் தங்கள் இனத்திற்கு என தனியொரு விமான சேவையை கட்டி எழுப்பி விட்டனர். மத்திய அமைச்சரைவில் பெரும் பங்காற்றிவரும் கேரள அரசியல் வாதிகள் இந்தியாவின் எந்த எதிர்ப்பும் இன்றி கேரளா விமான சேவையை திட்டமிட்டு தொடங்கிவிட்டனர். இந்த விமான சேவையில் மலையாள மொழிக்கே முன்னுரிமை தரப்படும்.

 இதே போல் ஒரு விமான சேவையை தமிழகம் முன்னெடுக்க வேண்டும் என தமிழர்கள் பலகாலம் ஆசைப்பட்டனர். ஆனால் இந்திய இறையாண்மை பாதிக்கும் என்று சொல்லி யாரும் இதைப் பற்றி பேசக் கூட முன்வரவில்லை. இப்போது கேரளா விமான சேவை தொடங்கியது அடுத்து, தமிழ்நாடும் துணிச்சலாக தமிழ்நாட்டு விமான சேவையை உருவாக்கி தமிழ் மொழியையும் விண்ணில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கையாகும்.



தமிழ்நாடு விமான சேவை மாதிரி படம் 


[vuukle-powerbar-top]

Recent Post