Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீண்டும் மீண்டும் சோகம் பள்ளிப் பேருந்து மோதி விபத்து - மாணவி பலி

திருவண்ணாமலையில் பள்ளிப் பேருந்து மோதி மூன்று வயது மாணவி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை அருகே உள்ள பெருமனமல்லூரில் உள்ள சித்தார்த்தா மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்து வரும் மாணவி மோனிஷா.இன்று மாலை வழக்கம்போல பள்ளிப் பேருந்தில் வந்துள்ளார் மாணவி மோனிஷா.இந்த நிலையில் மாணவி பேருந்தின் படியில் இருந்து இறங்கியதை கவனிக்காமல் பேருந்தை இயக்கியுள்ளார் ஓட்டுனர்.இதனால் வண்டியின் பின் சக்கரத்தில் சிக்கிய மோனிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.மேலும் விபத்து குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கடந்த சில மாதங்களாக இது போன்று பல பள்ளி மாணவர்களின் உயிரிழப்பு தொடர்கதையாகி வருகிறது.இதுபோன்று சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசும் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.ஓட்டுனரின் கவனக் குறைவு ஒருபுறம் இருந்தாலும் பெற்றோர்களின் கவனக்குறைவும் அதிகாமக உள்ளது.இனிமேல் இதுபோன்ற சோக விபத்துகள் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு கையாள வேண்டும்.
[vuukle-powerbar-top]

Recent Post