Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகை ஜோதிகா.


நடிகை ஜோதிகா தனது 35 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.இன்றைய பிறந்த நாளை அவரது கணவர், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இரசிகர்கள் அனைவரினதும் வாழ்த்துக்களுடன் மிக விமர்சையாக கொண்டாடவுள்ளார்.

தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்த வெற்றிகரமான கதாநாயகிகளில் குறிப்பிடத்தக்கவர் ஜோதிகா."வாலி"படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த அவரின் நடிப்பில் தமிழ் சினிமா இரசிகர்கள் திக்குமுக்காடி போயிருந்தனர்.

பல வெற்றிப்படங்களில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர்   சூர்யாவுடன் காதல் வயப்பட்டார்.நீண்ட காலமாக இருவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரது சம்மதத்துடன் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

திருமணத்தின் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்த ஜோதிகா சூர்யா தம்பதியினருக்கு தியா மற்றும் தேவ் என்று இரண்டு அழகிய குழந்தைகள் உண்டு.

தற்போது சூர்யாவுடன் இணைந்து விளம்பரப் படங்களில் நடித்து வரும் ஜோதிகாவை, வெள்ளித்திரையில் காண ஆவலாக உள்ளனர் அவரது இரசிகர்கள்.


[vuukle-powerbar-top]

Recent Post