Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சரத் பவார் மீது புகார் - முன்னாள் காவல்துறை அதிகாரி ஒய்.பி.சிங் குற்றச்சாட்டு

சரத் பவாரின் மீது முன்னாள் காவல்துறை அதிகாரி ஒய்.பி.சிங் முறைகேடு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.


மகாராஷ்ட்டிரா மாநிலம் புனே அருகில் லாவாசா எனும் மலை நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது.இதற்கு மிகக் குறைந்த விலையில் முறைகேடாக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒய்.பி.சிங் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த முறைகேட்டிற்கு சரத் பவாரும் அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சரத் பவாரின் நெருக்கமான உறவினரான அஜித் பவாரும் உதவியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த லாவாசா மலை நகரத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டுள்ள லேக் சிட்டி எனும் நிறுவனத்தில் சரத் பவாரின் மகளான சுப்ரியா சூலேவுக்கு பங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து சரத் பவார் தெரிவிக்கையில் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார்கள் என்றும் நில ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் கூறினார்.மேலும் லேக் சிட்டி நிறுவனத்தில் தனது மக்களுக்கு பங்கு இருப்பதை ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post