Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புலம்பெயர் தமிழ் மக்களை பார்த்து அச்சப்படும் இலங்கை

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் மேற்குலக நாடுகளுக்குச் சார்பானவர்களே அதிகளவில் அங்கம் வகிப்பதால் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படக்கூடிய தீர்மானங்கள் எடுக்கப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கையின் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் 26 ஆம் திகதி ஐ.நா கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு அச்சம் வெளியிட்டுள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
அந்தப் பேட்டியில் புலம்பெயர் தமிழ் மக்களையும் அமைச்சர் மகிந்த சமரசிங்க மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார். புலம் பெயர் தமிழர்கள் குருடர்கள் போலச் செயற்படுகிறார்கள் என்று அவர் திட்டித் தீர்த்துள்ளார். இலங்கையில் ஏராளமான அபிவிருத்திகள் நடைபெறுகின்ற போதிலும் சில புலம்பெயர் தமிழ் மக்கள் தமது சுயநலனுக்காக இவற்றை ஏற்க மறுக்கின்றார்கள் எனவும் இவ்வாறான புலம்பெயர் தமிழர்கள் குருடர்களை போன்றவர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

இலங்கையின் தற்போதைய உண்மை நிலைமையை சர்வதேசத்திற்கு தெரிவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும், அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் இணையத்தளங்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது எனவும் மகிந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்திற்கு இலங்கைக்கு நேரடியாக விஜயம் செய்யவதன் மூலம் இங்குள்ள மக்களின் உண்மை நிலைமையை தெரிந்து கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் இங்கு வாழ்கின்ற தமிழ் மக்கள் தினமும் பெரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். நில ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. கடைசியாக கேப்பாபுலவு மக்களுக்கு இடம்பெற்ற நிலைமை சர்வதேசத்திற்கே தெரிந்த விடயம். இந்த நிலையில் இலங்கையில்லுள்ள தமிழ் மக்கள் அனைவரும் தன்னிறைவோடு வாழ்கிறார்கள் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க எப்படி மார்தட்ட முடியுமென்று தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் தமிழ் மக்கள் வாழ்கின்ற காரணத்தால் தான் ஈழத்தில் இன்று வரை தமிழர்கள் என்ற இனமே வாழ்ந்து வருவதாகவும் இல்லாவிடில் சிங்கள அரசு முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்களுக்கு முடிவுரை எழுதியிருக்குமென்றும் தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். புலம்பெயர் தமிழ் மக்களை மகிந்த சமரசிங்க குருடர்கள் என்று திட்டியுள்ளதையும் அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post