Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

லக்ஷ்மி ராய்க்கும் அஞ்சலிக்கும் இடையே நடக்கும் கவர்ச்சி யுத்தம்.


பி.தி. செல்வகுமாரின் "ஒன்பதில குரு"  முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த படமாக அமையவுள்ளது.வினய் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை  இளம் சமுதாயமும் விரும்ப வேண்டும்  என  நினைத்த இயக்குனர் நகைச்சுவையோடு சற்று கவர்ச்சியையும் இணைத்துள்ளார்.

"காஞ்சனா" படத்தில் நடிகை லக்ஷ்மி ராயின் கவர்ச்சி கலந்த நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.இதனால் இக்கதாபாத்திரத்திற்கு இவரே பொருத்தமானவர் என நினைத்த இயக்குனர் நடிகை லக்ஷ்மி ராயை இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளார்.

லக்ஷ்மி ராய் மட்டுமல்லாது, நடிகை அஞ்சலியும் இப்படத்திற்காக  தன் பங்கிற்கு கவர்ச்சி கலந்த நடிப்பை வெளிப்படுத்தவுள்ளார். இரு நடிகைகளும் தத்தம் இரசிகர்களுக்காக  போட்டி போட்டு கவர்ச்சியாக நடிக்கவுள்ள "ஒன்பதில குரு" எப்போது வெளிவரும் என்ற ஆவல் கோடம்பாக்கத்தை நெருங்கியுள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post