Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விரைவில் திரைக்கு வரும் விக்ரம் மற்றும் ஜீவாவின் " டேவிட்" திரைப்படம்.


நடிகர்கள் விக்ரம் மற்றும் ஜீவா இணைந்து நடிக்கும்   பிஜோய் நபியர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "டேவிட்" படத்தை வெளியிடும் தேதியை  இப்படத்தின் இயக்குனர் அறிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம், வரும் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. நடிகர் விக்ரமிற்கு 2013 ஆம் ஆண்டிற்கான முதல் படமாக  இது அமையவுள்ள அதே சமயம், நடிகர் ஜீவாவின் "நீதானே என் பொன் வசந்தம்" திரைக்கு வரும் அதே வேளையில் இப்படமும் திரைக்கு வர இருப்பது ஜீவா இரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டமாக அமையவுள்ளது.

இப்படத்தின் இந்தி மொழியாக்கத்தில் நடிகர் ஜீவாவிற்கு பதிலாக நிதின் முகேஷ் நடித்துள்ளார். ஏனைய நடிகர்களாக தபு,லாரா தத்தா,இஷா ஷர்வாணி,ஷீடல் மேனன்,நிஷான் மற்றும் நசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

[vuukle-powerbar-top]

Recent Post