Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆழியாறு அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட ஜெ உத்தரவு

ஆழியாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் நாளை முதல் தண்ணீர் திறந்து விட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

இதனால், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்திலுள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தண்ணீர் திறப்பதால், பொள்ளாட்சி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. 

ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் பொது மக்கள் ஆகியோர் ஆழியாற்றிலிருந்து தண்ணீர் திறந்து விட கோரியதையடுத்து இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post