Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காணமல் போன இராமேஸ்வரம் மீனவர்கள் மீட்பு

காணாமல் போனதாக கருதப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 4 பேர் நேற்று கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனர். 

ஜான் பிரிட்டோ, வீரணன், லூகாஸ் மற்றும் வேல்முத்து என்ற அந்த நால்வரும் நேற்றிரவு ராமேஸ்வரம் அழைத்து வரப்பட்டனர். இதில் ஜான் பிரிட்டோவுக்குச் சொந்தமான படகில் மீன் படிப்பதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் இவர்கள் கடலுக்குச் சென்றனர். 

வழியில் படகு பழுதானதை அடுத்து, இவர்கள் நால்வரும் கரை திரும்ப முடியாமல் தவித்துள்ளனர். இவர்களுடன் சென்ற மற்ற படகுகள் கரைக்குத் திரும்பியதை அடுத்து, இவர்கள் வராததது உறவினர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. 

காணாமல் போனவர்களைத் தேடுவதற்காக மீன்துறை உதவி இயக்குநரின் அனுமதி பெற்று 6 மீனவர்கள் தனி படகு ஒன்றில் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் பழுதடைந்த நிலையில் படகு கண்டுபிடிக்கப்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post