Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெசோ ஆலோசனைக் கூட்டம் - மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்குமா தி.மு.க.?


திமுக தலைவவர் கருணாநிதி தலைமையில் டெசொ ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.இந்தக் கூட்டத்தில் தி.மு.க-வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். 


கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பின் சார்பாக நடைபெற்றக் கூட்டத்தில் ஈழத் தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் இந்த தீர்மானங்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் சமர்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த தீர்மானங்களை ஐ.நா. சபையில் சபர்பிக்க தேவையான நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் திரிணாமுல் காங்கிரஸ் மத்திய அரசிடமிருந்து விலகிய நிலையில் தி.மு.க. தான் மத்திய அமைச்சரவையில் பெரும் பங்காற்றிவருகிறது.தி.மு.க. இதனை பயன்படுத்தி இலங்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கு சில நெருக்கடிகளைக் கொடுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு இலங்கையுடன் நட்பு பராட்டிவருவதை தடுக்க சில நெருக்கடிகளைக் கொடுக்க வேண்டும்.இதனை தி.மு.க. செயல்படுத்துமா? இல்லை எப்பொழுதும் போல மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை கண்டு கொள்ளாமல் விட்டு விடுமா?
[vuukle-powerbar-top]

Recent Post