Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

செல்வராகவனால் தேடப்படும் புதுமுகங்கள்.


இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமா உலகிற்கு திறைமை வாய்ந்த புதியவர்களை அறிமுகப் படுத்தவுள்ளார். இதற்கான செயல்திட்டம்  ஒன்றை வகுத்துள்ள செல்வராகவன்,வரும் இரண்டு வருடத்திற்குள் சுமார் ஏழு படங்கள் வரை புதுமுகங்களை வைத்து இயக்கவுள்ளார்.

தன்னயுடைய பிரத்தியேக வலைத்தளத்தில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அவர்,இளம் கதாநாயகர்கள்,நாயகிகள்,இயக்குனர்கள்,பாடலாசிரியர்கள் ,கதாசிரியர்கள்,பாடகர்கள்,ஒளிப்பதிவாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் என திறைமை  வாய்ந்தவர்கள் தன்னை அணுகுமாறு விளம்பரப்படுத்தியிருந்தார்.

இவ்விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 500 மின்னஞ்சல்கள்  அவர் குறிப்பிடிருந்த அவருடைய மின்னஞ்சல் முகவரிக்கு வந்துள்ளது.அனைத்தையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து, அத்தனை மின்னஞ்சல்களுக்கும் பதில் அனுப்பப்படும் எனக் கூறிய செல்வா, அதிலிருந்து திறைமையானவர்கள் தேர்வு செய்யப்பட்டு தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தினூடாக அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

[vuukle-powerbar-top]

Recent Post