Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிறுத்துமஸ் புத்தாண்டை முன்னிட்டு திருநெல்வேலியிருந்து மும்பைக்கு குளிர்கால சிறப்புத் தொடர்வண்டி


கிறிஸ்மஸ் புத்தாண்டை முன்னிட்டு திருநெல்வேலியிருந்து நாகர்கோவில், கோவா வழியாக மும்பைக்கு குளிர்கால சிறப்பு இரயில் இயக்கம் மும்பையை தலைமையிடமாக கொண்ட மத்திய ரயில்வே கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு திருநெல்வேலி – மும்பை வழி தடத்தில் வராந்திர சிறப்பு ரயில் இயக்கபட்டு வருகிறது. இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம்  ஓர் அறிக்கையில் கூறியதாவது, 

திருநெல்வேலி – மும்பை வராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியிருந்து 01068 எண் கொண்ட ரயிலாக ஒவ்வொரு திங்கள்கிழமை மதியம் ஒரு மணிக்கு புறப்பட்டு வள்ளியூர், நாகர்கோவில் டவுன், இரணியல், குழித்துறை, திருவனந்தபுரம், கொல்லம், கோட்டையம், எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணணுர், மங்களுர், கோவா வழியாக செவ்வாய் இரவு 11:45 மணிக்கு போய் லோகமான்ய திலக்(மும்பை) சேருகிறது. மறுமார்க்கம் 01067 எண் கொண்ட இரயிலாக லோகமான்ய திலக் (மும்பை)யிலிருந்து சனிக்கிழமை மாலை 4:55 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை அதிகாலை 05:55 மணிக்கு சேருகிறது. இந்த ரயில் நாகர்கோவிலிருந்து 33 மணி 25 நிமிடங்களில் மும்பைக்கு போய் சேருகிறது. இந்த ரயில் நெல்லையிலிருந்து டிசம்பர் மாதம் 17,24 மற்றும் 31 தேதிகளில் மும்பை மார்க்கமும் டிசம்பர் 15,22,29 தேதிகளில் மும்பையிலிருந்து திருநெல்வேலி மார்க்கமும் இயக்கப்பட இருக்கிறது. 

குமரி மாவட்ட ரயில் பயணிகளின் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் வள்ளியூர், இரணியல், குழித்துறை இரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இவ்வாறு வள்ளியூர், இரணியல், குழித்துறை இரயில் நிலையத்தில் நின்று செல்வதால் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி பொதுமக்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். இந்த இரயில் மூலம் குமரி மற்றும் நெல்லை மாவட்ட பயணிகள் கேரளாவிற்கு பல்வேறு தொழில்கள் நிமித்தம் செல்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இந்த ரயிலில் புகழ்பெற்ற சுற்றுலா இடமாக கோவா(மடகான்) வழியாக செல்கிறது சிறப்பம்சம் ஆகும். இந்த இரயிலில் குளிர்சாதன இரண்டு அடுக்கு ஒரு பெட்டியும், குளிர்சாதன மூன்று அடுக்கு இரண்டு பெட்டியும், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிகள் கொண்ட பத்தொன்பது பெட்டிகள் மற்றும் மூன்று முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் உள்ளன. 

இந்த ரயில் திருநெல்வேலியிருந்து மும்பை செல்லும் போது வள்ளியூருக்கு மதியம் 1:40 மணிக்கும், நாகர்கோவிலுக்கு மதியம் 2:20க்கும், இரணியலுக்கு மதியம் 2:40 க்கும், குழித்துறை ரயில் நிலையத்துக்கும் மதியம் 2:55 மணிக்கு வந்து செல்கிறது. இதைபோல் மறுமார்க்கம் குழித்துறைக்கு அதிகாலை 2:30மணிக்கும், இரணியலுக்கு 2:50மணிக்கும், நாகர்கோவில் டவுண்க்கு 3:05க்கும், வள்ளியூருக்கு 3:40 மணிக்கும் வருகிறது. இந்த ரயிலின் கடைசி சேவை ஜுன் மாதம் முதல் வாரத்துடன் முடிகிறது. இந்த சிறப்பு இரயிலுக்கான முன்பதிவு நடந்து கொண்டிருக்கின்றன. இந்த இரயிலை அதிகமான குமரி மற்றும் நெல்லை மாவட்ட பயணிகள் உபயோகித்தால் நிரந்தரமாக இயக்க பிரகாசமான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகவே கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் இந்த சிறப்பு இரயிலை அதிகமாக முன்பதிவு செய்து பயன்படுத்துமாறு பொது மக்களை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 


[vuukle-powerbar-top]

Recent Post