Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை மின்சார தொடர்வண்டியில் திடீர் தீ விபத்து - பயணிகள் ஓட்டம்



சென்னை அக்டோபர் 8: தாம்பரம் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து கடற்கரை நோக்கி நேற்று மதியம் 12 பெட்டிகள் கொண்ட மின்சார தொடருந்து ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து கிண்டி ரெயில் நிலையம் நோக்கி நேற்று மதியம் 2.௦0 மணிக்கு சென்றது. அப்போது நடுவில் உள்ள 5-வது பெட்டியில் மோட்டார் உள்ள பகுதியில் இருந்து, தீப்பிடித்து திடீரென குபு குபுவென புகை கிளம்பியது. இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தீப்பிடித்துவிட்டதாக நினைத்து, சத்தம் போட்டனர்.

இந்த நிலையில் தொடருந்து கிண்டி வந்தடைந்ததால் தொடர்வண்டி ஓட்டுனர், உடனே வண்டியை கிண்டி தொடருந்து நிலையத்தில் நிறுத்தினார். அப்போது அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழே குதித்து ஓடினார்கள். இதை பார்த்ததும், மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகளும் ஓடினர். ரெயில் நிலையத்தில் பயணிகள் அலறியடித்து ஓடுவதை கண்ட தொடர்வண்டி நிலைய அதிகாரிகள் விரைந்து வந்தனர். 

நடுபெட்டியில் புகை வருவதை கண்டதும் தொடர்வண்டி இயக்கத்தை நிறுத்தினார்கள். ரெயில் பெட்டியில் புகை வருவதால் ரெயில் இயக்கம் நிறுத்தப்படுகிறது. பயணிகள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பயணிகள் அங்கும் இங்கும் ஓடியதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே தொடர்வண்டி நிறுத்தப்பட்டவுடன் புகை வருவது நின்றது. இதையடுத்து அந்த பகுதியில் அமைதி திரும்பியது. கடற்கரை நோக்கி செல்லும் மின்சார தொடர்வண்டி பணிமனைக்கு செல்வதால் யாரும் ஏறவேண்டாம் என்று அறிவிப்பு செய்து மதியம் 3 மணிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. தொடர்வண்டி  தீப்பிடித்து எரிந்ததால், சுமார் ஒரு மணி நேரம் தொடர்வண்டி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

[vuukle-powerbar-top]

Recent Post