Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விஜயின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம்.


இயக்குனர் ஏ.எல்.விஜய் தனது  அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இம்முறை அவரது படத்தில் விஜய் நாயகனாக நடிக்கவுள்ளார்.அவருடைய படங்களில் ஏற்கனவே பல முறை நடித்த நாசர் மற்றும் சந்தானம் ஆகியோர்  இப்படத்திலும் நடிக்க இருக்கிறார்கள்.அத்தோடு அவருடைய படங்களுக்கு இசையமைத்து அவை   இசைரீதியிலும் வெற்றி பெற காரணமாக இருந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் அவர்களே இப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

 இப்படத்தின் மூலமாக முதன்முதலாக விஜயின் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளார்.ஏற்கனவே நடிகர் விஜய் மற்றும் சத்யராஜ் இணைந்து  நடித்த "நண்பன்" படம் மிகப் பெரியளவில் வெற்றிபெற்றிருந்தது அதனை தொடர்ந்து இப்படத்திலும் இவர்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும் என்பதில் ஐயமில்லை.

ஆரம்பத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தாவின் பெயர் சிபாரிசு செய்யப்பட்ட போதும், இன்னும் இத்தகவல் உறுதி  செய்யப்படவில்லை.

இப்படம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு அலை செய்திகளின் திரைகடலோடு இணைந்திருங்கள்.

[vuukle-powerbar-top]

Recent Post