Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெங்கு பரவுவதை தடுக்க மீண்டும் ஆலோசனை நடத்தும் ஜெயலலிதா

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து. அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பு, அதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து கடந்த வாரம் ஆலோசிக்கப்பட்ட நிலையில், இன்று 2வது முறையாக முதலமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தி வருகிறார்.
[vuukle-powerbar-top]

Recent Post