Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கழிப்பறை இல்லாத வீட்டிற்கு மணமகளாக செல்ல வேண்டாம் ~ மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

கழிப்பறை இல்லாத வீட்டிற்கு மணமகளாக செல்வதில்லை என்பதில் இளம் பெண்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

திருமண பொருத்தம் பார்ப்பதில் இளம் பெண்கள் ஆர்வம் காட்டுவதாக கூறிய ஜெயராம் ரமேஷ், அதே ஆர்வத்தை மணமகன் வீட்டில் கழிப்பறை உள்ளதா என்பதிலும் காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தானின் கோட்டை மாவட்டத்தில் நிர்மல் பாரத் யாத்திரையை தொடங்கிவைத்து பேசும்போது, ஜெய்ராம் ரமேஷ் இதனைத் தெரிவித்தார். இந்தியாவில் கழிப்பறைகளை விட, கோயில்கள் தான் அதிகமாக உள்ளன என்று கூறி, அண்மையில் சர்ச்சையில் சிக்கியவர் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். இந்த நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய இந்த கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார்.
[vuukle-powerbar-top]

Recent Post