Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முக்கிய நபர் வீட்டில் நடந்த கோரச் சம்பவம்.



இந்திய சினிமா பாடகர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராக விளங்குபவர் ஆஷா போன்ஸ்லே.இந்தி சினிமா பாடல்கள் மட்டுமன்றி அவர் பாடிய சில தமிழ் சினிமா  பாடல்கள் கூட கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும்.

பத்ம விபூஷன் மட்டுமல்லாது ஏராளமான விருதுகளுக்கு சொந்தக்காரராக இருப்பவர் அவர்.அவருடைய வீட்டில் ஒரு துக்ககரமான சம்பவம் நடந்தேறியுள்ளது.ஆஷா போன்ஸ்லே மகளும், அரசியல் நிபுணரும், பத்திரிக்கையாளருமான வர்ஷா தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு மரணத்தை தழுவியுள்ளார்.இதே போன்று கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னாள் இவர் மேற்கொண்ட தற்கொலை முயற்சி கைகூடவில்லை.

மும்பையில் அவருடைய வீட்டில் இருந்த உடலை அக்கப் பக்கத்திலிருப்பவர்கள் பார்த்து காவல்துறைக்கு அறிவித்திருந்தனர்.தற்போது காவல்துறையின் முழு கட்டுப்பாடில் இருக்கிறது  அவரது வீடு.  அவரது உடலானது மேலதிக விசாரணைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது சிங்கபூர் நகரில் நடக்கும் விருதுகள் வழங்கும் விழா ஒன்றிற்காக சென்றுள்ளார் ஆஷா போன்ஸ்லே.


[vuukle-powerbar-top]

Recent Post