Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மின்னலே மற்றும் அலைபாயுதே வரிசையில் போடா போடி.


அண்மையில் வெளியான "போடா போடி" படத்தின் பாடல்கள், மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன.இணையத்தளம் வாயிலாக இப்படத்தின் பாடல்கள்  மற்றும் கைபேசி அழைப்பு இசை ஆகியவற்றை தரவிறக்கம் செய்யும் இரசிகர்களின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இப்படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வெற்றியால் மிக சந்தோசத்தில் உள்ளார், இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவா."போடா போடி" படத்தின் இசைக்கான உரிமையை பெற்றுள்ள "சோனி"இசை நிறுவனம் வெளியிடுள்ள செய்தியில்,"மின்னலே" மற்றும் "அலைபாயுதே" படங்களின் பின்னர் ஒரு படத்தின் ஒட்டுமொத்த பாடல்களும் மிக பெரியளவில் வெற்றி பெற்றிருப்பது இப்படத்தில் மட்டுமே என கூறியுள்ளது.இதனால் மிகவும் சந்தோசத்தில் உள்ளார் படத்தின் இசையமைப்பாளர் தரன்.

"போடா போடி" படமானது வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் சிம்புவுடன் வரலக்ஷ்மி சரத்குமார் ஜோடியாக
நடித்துள்ளார்.

[vuukle-powerbar-top]

Recent Post