Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியாவில் இருந்து திரும்பியதும் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணையும் – இலங்கை அமைச்சர் நம்பிக்கை

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியதும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ளும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார் இலங்கையின்    மூத்த அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண.

“நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளில் பங்கேற்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி என்று எல்லாக் கட்சிகளும் தெரிவுக்குழுவில் தமது முன்மொழிவுகளை சமர்ப்பிக்கலாம்.

முதலில் எதிர்க்கட்சிகள் எந்தெந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதை இனங்காண வேண்டும்.

இந்திய அரசுடனான பேச்சுக்களை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
[vuukle-powerbar-top]

Recent Post