Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இரண்டாவது படத்திற்காக அமைக்கப்பட்ட "சாவு கீதம்".


இன்றைய தமிழ் சினிமாவில் பரவி வரும் ஒரு புதிய கலாச்சாரமாக,ஒவ்வொரு இயக்குனரும் தங்கள் படங்களில் ஒரு பாடலை ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் கீதமாக அமைக்கிறார்கள்.

அண்மையில் நடிகர் சிம்பு "காதல் கீதம்" என்ற தலைப்பின் கீழ்  ஒரு பாடலை அமைத்திருந்தார் . அதேபோல் இயக்குனர் மிஷ்கின் அவருடைய படத்தில் ஒரு பாடலை "பார் கீதம்"( bar ) என்ற தலைப்பின் கீழ் அமைத்திருந்தார்.

இந்த வரிசையில் இப்போது "தமிழ் படம்" இயக்குனர்  சி.எஸ்.அமுதன் அடுத்து இயக்கிக்கொண்டிருக்கும் "இரண்டாவது படம்" என்ற பெயரிடப்பட்ட படத்தில் முதன்முதலாக "சாவு கீதம்" என்ற தலைப்பின் கீழ் ஒரு பாடலை அமைத்துள்ளார்.

இவரது "தமிழ் படத்தில்" இடம்பெற்ற "ஒ மகசீயா...." என்ற பாடல் எந்த ஒரு  தமிழ் அர்த்தத்தையும் கொண்டிராத போதும் மிக பெரியளவில் வெற்றி பெற்றிருந்தது.அதேபோல் இப்பாடலும் அமையும் என்ற நோக்கத்தோடு, மதன் கார்கியின் வரிகளுக்கு   மெட்டு அமைத்துள்ளார் இசையமைப்பாளர் கண்ணன்.

[vuukle-powerbar-top]

Recent Post