Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க கூடுதல் தொடர்வண்டிகள்

பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கூடுதல் ரயில்களை இயக்க இந்திய ரயில்வேத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி தசரா, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களின் போது, 4 ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

சென்னை உள்பட 35 முக்கிய வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஏற்கனவே இயக்கப்படும் ரயில்களில் தேவைக்கு ஏற்ப, கூடுதல் பெட்டிகளை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

இவற்றுக்கான பயணச்சீட்டுகள் வழங்குவதில் முறைகேடுகளை தடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்களை, www.indianrailways.gov.in என்ற இணையதளத்திலும், அந்தந்த மண்டல ரயில்வே இணையதளங்களிலும் தெரிந்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post