Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முன்னாள் பெண் போராளிகளை சந்தித்த ராஜபக்ச!


இலங்கைப்படையினரின்  கண்காணிப்பின் கீழ் உண்ணா புனர்வாழ்வு முகாமில் இருந்து ஒருதொகுதி  முன்னாள் பெண் போராளிகள் மகிந்தறாஜபக்சவினை சந்தித்துள்ளார்கள்.
பன்னாட்டு மகளீர் நாளினை முன்னிட்டு மகிந்த இந்த சந்திப்பினை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருதொகுதி பெண் போராளிகள் புனர்வாழ்வு கொடுக்கப்பட்ட நிலையில் சிங்களவர்களின் கலாச்சாரத்திற்கு மாற்றப்பட்ட இப்பெண்கள் மகிந்தவினை சந்திப்பதற்காக தெரிவு செய்யப்பட்டு இலங்கையின் அலரி மாளிகைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்கள்.
இந்த சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போது குறித்த பெண் பிள்ளைகள் போரின் பின்னர் ஏற்பட்ட தமது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது பல அமைச்சர்களும் ஜனாதிபதியுடன் முன்னாள் பெண் பிள்ளைகளை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post