Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் இருந்து திறந்துவிடும் தண்ணீரை நிறுத்தியது.ஆனால் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.நேற்று 1646 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 6695 கன அடியாக அதிகரித்துள்ளது.இது விவசாயிகள் மத்தியில் சற்று ஆறுதலை அளித்துள்ளது.

மேலும் வானிலை அறிக்கையின் தகவல்படி தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால் இன்னும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கர்நாடக அரசின் செயல்பாடுகளால் அதிரிப்தியாக இருந்த மக்கள் மழையின் காரணமாக சற்று மகிழ்ச்சியாக உள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post