Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையை மிரட்டும் புயல் - காற்றின் வேகம் அதிகரிப்பு

தென் கிழக்கு வங்கக் கடலில் சென்னையில் இருந்து 270 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் நீலம் புயல் மெதுவாக சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 

சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நீலம் புயலால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.மேலும் இன்று மாலை சென்னையை கடக்க இருக்கும் இந்த புயலால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நீலம் புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் புயலின் காரணமாக தமிழகம் முழுவதும் 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கடலோர மாவட்டங்களில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது.அனைத்து கடலோர மாவட்டங்களிலும் புயலை எதிர்கொள்ள தகுந்த பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்தந்த பகுதி ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சென்னையில் புயல் பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.இந்த பாதுகாப்பு மையங்களை தொடர்புகொள்ள 1913 என்ற தொடர்பு எண்ணும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post