Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நின்றுவிடாமல் தொடரும் கன மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, இன்றும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை : 

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நேற்றும் மழை நீடித்தது. தலைநகர் சென்னையில் நேற்று பகல் மட்டுமின்றி, இரவிலும் விட்டு விட்டு மழை பெய்தது. மழை தொடர்ந்து நீடிப்பதால், சென்னை, திருச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக, சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் 2 மாடி கட்டடம் ஒன்று நேற்று இடிந்துவிழுந்தது. எனினும் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை. தொடர் மழை காரணமாக, தரமணியில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்திற்குள்ளும் மழை நீர் புகுந்தது. 

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குன்னூர்- உதகை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. வெலிங்டன் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட மண் சரிவால் குன்னூர்- உதகை ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. 

இதனால், சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர் மழையால் குன்னூர், மேட்டுப்பாளையம் சாலைகளில் சிறு சிறு பாறைகள் உருண்டு விழுந்தன. கும்பகோணத்தில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. 

அப்போது, இடி தாக்கியதில் பிரசித்தப் பெற்ற கம்பகரேஸ்வர சுவாமி திருக்கோயிலின் ராஜகோபுரம் சேதம் அடைந்தது. அதோடு, அருகேயிருந்த டிரான்ஸ்பார்மரும் தீப்பிடித்து எரிந்தது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில பெய்து வரும் கனமழை காரணமாக இயல்வு வாழ்க்கை முடங்கியுள்ளது. 

இதனால், கடநத் மூன்று தீங்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனிடையே, தமிழகத்தில் பெய்து வரும் கனமழை, அடுத்த 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post