Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பெட்ரோல் நிலையங்கள் வேலை நிறுத்தத்தை தமிழகம் புறக்கணிப்பு

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் நாடு முழுவதும் நடத்தும் வேலைநிறுத்தத்தில் தமிழகம் பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கமிஷனை உயர்த்தித் தராததை கண்டித்து, நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள், எட்டு முதல் 10 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று, அகில இந்திய பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இன்று முதல் இந்த போராட்டம் துவக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்படாது என்றும், தினமும் 16 முதல் 24 மணி நேரம் அவை திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு பெட்ரோலியம் விநியோகஸ்தர்கள் சங்க துணைத் தலைவர் சுரேஷ் குமார் கூறும் போது, நிலையங்களை மூடுவதற்கு பதிலாக, 3 ஆயிரத்து 800 நிலையங்களிலும் கருப்புக் கொடி வைக்கப்பட்டு, ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றார். 

அடுத்த 15 நாட்களுக்குள் கமிஷன் தொகையை உயர்த்தாவிட்டால், தமிழகத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களும் எட்டு முதல் 10 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post