Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த ஆஸ்திரேலியா விரும்பும்

இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த ஆஸ்திரேலியா விரும்புவதாக இந்தியா வந்துள்ள அந் நாட்டு பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான நட்பு மிகப் பழமையானது என்று தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதே தனது பயணத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்.

மூன்று நாள் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்த ஜூலியா கில்லார்டுக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் மன்மோகன் சிங் உடனான பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு வர்த்தக உடன்படிக்கைகள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜூலியா கில்லர்டு, இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவதற்கு ஏற்ப ஆஸ்த்ரேலியாவின் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post