Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று அநேக இடங்களில் இடியுடன் மழைபெய்ய வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று அநேக இடங்களில் இடியுடன் மழைபெய்யும் வானிலை மையம்அறிவிப்பு 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (புதன்கிழமை) அநேக இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று அல்லது நாளை தென்மேற்கு பருவமழை முடிவடைந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. 

நேற்று சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:- 

லட்சத்தீவில் உள்ள மேல்அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடியுடன்கூடிய மழைபெய்யும். 

சில இடங்களில் அதுவும் தென்மாவட்டங்களிலும், வட மாவட்டங்களில் உள் பகுதிகளிலும் கன மழைபெய்ய வாய்ப்பு அதிகம். நேற்று காலை 8-30மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர மழை அளவு வருமாறு:-

தேங்கனிக்கோட்டை, ஓசூர், கெட்டி, சங்ககிரி தலா 6 செ.மீ., பெரியகுளம் 5 செ.மீ., சூளகிரி, பாலக்கோடு தலா 4 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், தளி, தேனி, சேலம், வால்ப்பாறை தலா 3 செ.மீ., ஏற்காடு, ஓமலூர், செங்கம், அண்ணாபல்கலைக்கழகம், பரமத்தி வேலூர், பெரியகுளம், போடிநாயக்கனூர்,கூடலூர், சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர் தலா 2 செ.மீ., ராயக்கோட்டை, அஞ்சட்டி, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, வத்திராயிருப்பு, திருச்சி, உத்தமபாளையம், விளாத்திக்குளம், ஸ்ரீவைகுண்டம் ,திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், திருவண்ணாமலை, சின்னக்கள்ளார், பேச்சிப்பாறை தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post