Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தொடங்கியது காவிரி உரிமை தொடர்வண்டி மறியல் (படங்கள்)



காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பையும் இறுதித் தீர்ப்பையும் ஏற்க மறுத்து அடாவடித் தனம் செய்யும் கர்நாடகத்தை கண்டித்து . ஒரு நாளைக்கு 2 டி. எம்.சி. வீதம். 2012 அக்டோபர் 30ஆம் நாள் வரைக் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டு அதைச் செயல்படுத்துமாறு இந்திய அரசை வலியுறுத்தியும்.

காவிரிப் பாசன மாவட்டங்களின் இன்று முழுவதும், தொடர்வண்டி இயங்காமல் பெருந்திரள் மறியல் செய்வோம். இந்திய அரசின் வஞ்சகத்தைக் கண்டிப்போம் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களும், கட்சிகளும் இணைந்த காவிரி உரிமை மீட்புக் குழு ஒருகினைப்பாளர் தோழர் பெ.மணியரசன் தெரிவித்தார், முதற்கட்டப் போராட்டமாக இன்று (4.10.2012) நடைபெற்ற தமிழக இளைஞர் முன்னணி சார்பாக காலை 7.40 பெங்களூர் செல்லும் தொடர்வண்டியை சிதம்பரத்தில் மறிக்கப்பட்டது.

தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் ஆ.குபேரன் தலைமையில், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் சுப்பிரமணியசிவா, கலைவாணன், மணிமாறன், சுகன்ராஜ், விஜயராஜ், யாழவன் உள்ளிட்ட தோழர்களை கைது செய்த காவல்துறையினர் சிதம்பரம் காவிரி அரங்கில் வைத்துள்ளனர். 

 இன்று தொடர்ச்சியாக காவிரிப் பாசன மாவட்டங்களின் தொடர்வண்டி மறியல் நடைப்பெரும் என எதிர் பார்க்கப் படுகிறது....
[vuukle-powerbar-top]

Recent Post