Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சில்லறை வணிக்கத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி :தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 

இதுதொடர்பான வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர். அதேநேரத்தில் சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்காக அந்நிய செலாவணி தொடர்பான விதிகளில் மாற்றம் கொண்டுவருமாறு ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதற்காக இரண்டுவார கால அவகாசமும் நீதிபதிகள் வழங்கியுள்ளனர். சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. 

இதற்கு எதிர்க்கட்சிகளும் வணிகர் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post