Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராணாவிற்காக ஒரு பாட்டிற்கு குத்தாட்டம் போட சம்மதித்த சமீரா.


"வேட்டை" படத்திற்கு பின்னர், எந்த ஒரு தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகாத  நடிகை சமீரா ரெட்டி,தற்போது , "வானம்" பட இயக்குனர் கிரிஷின்  அடுத்த படைப்பான தெலுகு படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவுள்ளார்.

அண்மையில் மும்பையில், சமீராவை சந்தித்த இப்படத்தின் நாயகன் ராணா,இப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நீங்கள் தான் என்னுடன் ஆடவேண்டும் என கேட்டுக்கொண்டதையடுத்தே இதற்கு சமீரா சம்மத்தித்ததாக கூறப்படுகிறது.

இப்பாடல் காட்சி படமாக்கப்படுவதற்காக நான்கு நாட்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,ஹைதராபாத் நகரில் நேற்று ஆரம்பமான இப் பாட்டிற்கான ஒளிப்பதிவில்,நடிகர் வெங்கடேஷும் கலந்து கொண்டதாக  செய்திகள் கூறுகின்றன.

"கிரிஷ்ணம் வந்தே ஜெகத்குரும்" என பெயரிடப்பட்ட இப்படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.இப்படத்திற்காக இசையமைக்கவுள்ளார் இசையமைப்பாளர் மணி ஷர்மா.



[vuukle-powerbar-top]

Recent Post