Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கோயில்களை விட கழிப்பறைகள்தான் நாட்டுக்கு தேவை என்று சொன்ன அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வீடு முற்றுகை


புதுடெல்லி: கோயில்களைவிட கழிப்பறைகள்தான் நாட்டுக்கு அதிகம் தேவை என்று கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்பு கேட்கக்கோரி அவரது வீட்டை வி.எச்.பி, பஜ்ரங்தளம் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டனர்.சுத்தம், சுகாதாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுத்து கழிப்பறைகள் கட்டும் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் கூறுகையில்,கோயில்களைவிட கழிப்பறைகள் முக்கியமானவை. போதுமான கழிப்பறைகள் அமைக்கப்படாதது வருத் தம் அளிக்கிறது. கோயில்களைவிட கழிப்பறைகள்தான் நாட்டுக்கு அதிகம் தேவை என்றார். 

இதற்கு பா.ஜ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள ஜெய்ராம் ரமேஷ் வீட்டை விசுவ இந்து பரிசத்(வி.எச். பி), பஜ்ரங் தள தொண்டர்கள் நேற்று திடீரென முற்றுகையிட்டனர். தனது பேச்சுக்கு ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post