Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாடகி சின்மயி கொடுத்த பொய் புகார். ஒருவர் சிறையில் அடைப்பு. அதிர்ச்சியில் தமிழர்கள்



பாடகி சின்மயி கொடுத்த பொய் புகார். ஒருவர் சிறையில் அடைப்பு. அதிர்ச்சியில் தமிழர்கள் . 

ட்விட்டர் இணையத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் அடிப்படையில் பாடகி சின்மயி சென்னை காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் மனுவை கொடுத்தார் . அதாவது ட்விட்டர் இணையத்தில் ஆறு நபர்கள் தன்னை பற்றி ஆபாசமாக பேசியதாகவும்,      ஆபாச படங்களை வெளியிட்டதாகவும் ஒரு புகார் கொடுத்தார். ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் இணையத்தில் கிடைக்கப் பெறவில்லை. சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கருத்துரிமையை தான் இந்த நபர்கள் வெளியிட்டு இருந்தனர். அதை கடந்து எந்த ஒரு ஆபாச கருத்துகளையும் இவர்கள் வெளியிட்டாக தெரியவில்லை. 

ஓராண்டுக்கு முன்பு மீனவர்களை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து ட்விட்டரில் மிகப் பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர் தமிழ் ஆர்வளர்கள். அந்த பரப்புரையின்  போதே மீனவர்களுக்கு சின்மயியிடமும் ஆதரவு கேட்டுள்ளனர் தமிழர்கள் . அதற்கு ஆதரவு தருவதும் தராததும் அவரது தனிப்பட்ட விருப்பம் தான் . ஆனால் அதை விடுத்து தான் மீன் உண்பதுமில்லை , மீன்களை கொல்வதும் இல்லை என்று கூறிவிட்டு தனது பதிலை கூறியுள்ளார் சின்மயி. இது  சிங்கள கடற்படையால் கொல்லப்படும் மீனவர்களுக்கு தனது  ஆதரவு இல்லை என்ற சின்மையியின் நிலைபாட்டை காட்டும் வண்ணம் உள்ளது.  

இப்படியான ஒரு பதிலை தமிழர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. ஒரு உணவு உண்ணும் அடிப்படையில் மனிதர்களை பிரித்துப் பார்ப்பது தான் மனித நேயமா ? பாரம்பரியமாக மீன்களை நம்பி வாழும் ஒரு தொல்குடி மக்களை இப்படித் தான் கொச்சை படுத்துவதா என்று தமிழ் உணர்வாளர்கள் பொங்கவே, சின்மயியிக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் காழ்ப்புணர்ச்சி தொடங்கியது. அது பல வகைகளில் ட்விட்டர் இணையத்தில் மோதலாக வெடித்தது. தமிழ் உணர்வாளர்களுக்கும், சின்மையியின் ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்தது.  

பின்பு மற்றுமொரு  நேரத்தில்  இட ஒதுக்கீடு பற்றி சின்மையியின் கருத்து தமிழர்களை புண்படுத்துவதாக அமைந்தது. அவர் இட ஒதுக்கீடுக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்து இருந்தார். தாழ்த்தப் பட்டவர்கள் என்று யாரும் இல்லவே இல்லை என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தமிழர்கள் சின்மையியை கருத்தியல் ரீதியாக தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து வாக்குவாதம் முற்றிப் போனது இதன் உச்ச கட்டம் தான் சின்மயி கொடுத்த பொய் புகார். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் , இது பெண்களுக்கு எதிரான கொடுமை என்ற அடிப்டையில் காவல்துறையில் புகார் அளித்தார் சின்மயி. 

இந்திய சட்டத்தில் எல்லோருக்கும்  பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு இடம் உண்டு . அந்த வகையில் எந்தவித ஆதாரம் இல்லாமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறை இன்று சரவணகுமார் என்பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்திருப்பது பலரையும் கொதிப்டைய வைத்துள்ளது. மேலும் புகார் சுமத்தப்பட்டுள்ள மற்றவர்களையும்  காவல் துறை விசாரித்து வருகிறது.  சின்மையிக்கு ஆதரவாக காவல்துறை நடந்திருப்பது ஒரு ஆதிக்க மேல் சாதிக்கு காவல்துறை துணை போவதாக  உள்ளது என்று பலரும் கருதுகின்றனர். 

சின்மயி விவகாரத்தில் அரசியல்வாதிகளின் பங்கும் உள்ளதாக கூறப்படுகிறது . இவ்வளவு வேகமாக எந்த அடிப்படை ஆதாரம் இல்லாமல் காவல் துறை கைது நடவடிக்கை எடுத்திருப்பது , சின்மயியின் அரசியல் செல்வாக்கு மற்றும் ஆதிக்க சாதியினரின் ஒத்துழைப்பும் தான் காரணம் என்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள்.    இந்நிலையில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக சின்மயி பதிவு செய்த நிலைதகவல்கள் அடிப்படையில் தமிழர்கள் சின்மயி மீதும் வழக்கு தொடலாம் எனத் தெரிகிறது . இதனால் சின்மயி விவகாரம் மேலும் சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது.  




[vuukle-powerbar-top]

Recent Post