Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராதிகாவால் புகழப்பட்ட "சுந்தரபாண்டியன்"


சசிக்குமார்  நடிப்பில் அண்மையில் வெளியான "சுந்தரபாண்டியன்" திரையரங்குகள் அனைத்திலும் கூட்டம் நிறைந்த காட்சிகளாகவே திரையிடப் பட்டு வரும் நிலையில், இப்படமானது அனைத்து தரப்பு மக்களும் விரும்பி பார்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இப்படத்தை பார்த்த தமிழ் சினிமாவில் மிக முக்கிய பங்கு வகிக்கும் நடிகை ராதிகா சரத்குமார்,இப்படத்தைப் பார்த்து தான் மிக மிக சந்தோஷப்பட்டதாகவும், உண்மையிலேயே அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.

சில காட்சிகள் மிக மிக அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகவும்,இன்றைய இளம் சமுதாயத்திற்கு தேவையான சில கருத்துக்கள் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

ராதிகாவின் இவ்வாறானதொரு வெளிப்படையான கருத்தால், சந்தோஷத்தின் உச்சியில் உள்ளது "சுந்தரபாண்டியன்" படக்குழு.குடும்பத்தில் நடக்கும் சின்ன சின்ன விடயங்களை நகைச்சுவை இரசனையோடு கலந்து உருவாகியிருக்கும் "சுந்தரபாண்டியன்" வெற்றிபெற வாழ்த்துகிறோம்.


[vuukle-powerbar-top]

Recent Post