Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சோனியா காந்தி தமது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார்

குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டது காங்கிரஸ் கட்சிதான் என்று குறிப்பிட்டார். குஜராத்தின் வளர்ச்சிக்காக அடித்தளம் இடாதவர்கள், தற்போது நல்ல பெயரை மட்டும் தட்டிச் செல்ல முயல்வதாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை மறைமுகமாகச் சாடினார்.

இதுமட்டும் இன்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான 50 சதவிகித நிதி, மத்திய அரசில் இருந்து கிடைப்பதை நரேந்திர மோடி, மூடி மறைப்பதாக அவர் குறிப்பிட்டார். சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாட்டை தவறான பாதையில் இட்டுச்செல்வதாகக் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும்அவர் குறிப்பிட்டார். சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு குஜராத் மாநில விவசாயிகளுக்கு பலனளிப்பதாக இருக்கும் என்று அவர் கூறினார். 

ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் முட்டுக்கட்டை போட்ட பாரதீய ஜனதா, ஊழல் ஒழிப்பில் இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டினார். மகாத்மா காந்தி மற்றும் நேருவின் கொள்கைகளை பின்பற்றும் காங்கிரசுக்கு வாக்களித்தால், குஜராத்தில் புதிய அத்தியாயம் படைப்போம் என்றும் சோனியா காந்தி உறுதி அளித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post