Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"தமிழெனென்று சொல்லடா! தலை நிமர்ந்து நில்லடா!" என்ற வரிக்கு சொந்தக்காரர் இவர்


"தமிழெனென்று சொல்லடா! தலை நிமர்ந்து நில்லடா!" -மேற்கண்ட முழக்கம் தமிழர் உரிமைப் போராட்டங்கள் வெடித்தெழும் போதெல்லாம் பகைவரை நடுநடுங்க வைக்கும். இந்த முழக்கத்திற்கு சொந்தக்காரர் 'காந்தீயவழிப் போராளி' நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் ஆவார். எளிய முறையில் திருக்குறளுக்கு உரை தந்தவர். இவர் எழுதிய மலைக்கள்ளன் புதினம் திரைப்படமாகி தேசிய விருது பெற்றது.

தமிழர் இன உணர்வு, தீண்டாமை, பெண்ணடிமைத்தனத்திற்க்கு எதிராக பாடல் மூலம் குரல் எழுப்பியவர். அன்றைய நாளில் "தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு" பாடலை முணு முணுக்காத தமிழரில்லை. அவர் வாழ்நாளில் செய்த தவறு காங்கிரசு கட்சியில் இருந்தது தான். எந்த காங்கிரசுக்காரனும் அவரை கண்டு கொண்டதாக தெரிய வில்லை. நாமக்கல்லில் அவர் வாழ்ந்த வீடு சில புகைப்படங்களோடு காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கின்றன. நாமக்கல்லில் அவருக்கு சிலை கூட கிடையாது. வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் நேரு முதல் அவரது பேரன் ராஜீவ் வரைக்கும் மூலை முடுக்கெல்லாம் சிலை உள்ளது. இன்னும் கொள்ளுப்பேரன் ராகுலுக்கு சிலை வைக்க வேண்டியது தான் பாக்கி. புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள அரசு அலுவலகக் கட்டடத்திற்கு "நாமக்கல் கவிஞர் மாளிகை" என்று கருணாநிதியால் பெயர் சூட்டப்பட்டது தான் சற்று ஆறுதலான விசயம். இந்தக் கட்டடத்தின் 'ராசி' காரணமாக இந்தப் பெயரை செயலலிதா விட்டு வைத்திருக்கிறார். 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை தமிழராக அடையாளப் படுத்திப் போராடிய நாமக்கல்லார் இன்று உயிரோடிருந்தால் சோனியாவிற்கு எடுபிடிகளாக மாறிப் போன காங்கிரசு கயவாளிகளைப் பார்த்து, "தமிழனென்று சொல்லாதே! இழிவைத் தேடிக் கொள்ளாதே!" என்று தான் பாடியிருப்பார்! ||நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிறந்த நாள்|| *19.10.1888*

நன்றி : கதிர் நிலவன் 
[vuukle-powerbar-top]

Recent Post