Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

யாழ் வரணிபகுதியில் துப்பாக்கிசூட்டு சத்தம் மக்கள் பதற்றத்தில்!


யாழ்.வரணிப் பகுதியில் கேட்ட துப்பாக்கி சூட்டுச்சத்தத்தினால் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
யாழ் வரணிப்பகுதியில் மக்கள் நடமாட்டம் நிறைந்த நகர்பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப்படையினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுவினரே இவ்வாறான துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
குறிப்பிட்ட பகுதியில் கூடி நின்ற மக்களை மிரட்டும் தொனியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இச்சம்பவத்தினை தொடர்ந்து குறித்த பகுதிக்கு விரைந்த படையினர் மக்கள் பலரை சோதனையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தினால் அப்பகுதியில் நின்ற மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post