Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையையும் தாக்கியது டெங்கு காய்ச்சல்

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இரண்டு பேர் பலியாகினர். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இது தொடர்பாக ஆய்வு நடத்த செனனை வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், டெங்கு பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தென் மாநில அரசுகள் மேற்கொண்டு வருவதாக கூறினார். 

அரைக்கால் ட்ரவுசர், அரைக்கை சட்டை அணிந்து பள்ளி செல்லும் மாணவர்களே டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த குலாம் நபி ஆசாத், இப்பிரச்னை தீரும் வரை 2 அல்லது 3 மாதங்களுக்கு மாணவர்கள் உடலை முழுமையாக மூடக்கூடிய ஆடைகளை அணிய கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
[vuukle-powerbar-top]

Recent Post