Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெங்கு பற்றி கவலை வேண்டாம் ஜெ வேண்டுகோள்

டெங்கு காய்ச்சலால் 59 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 400 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

டெங்கு காய்ச்சல் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், டெங்கு குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காய்ச்சல் நிலைமை நாள்தோறும் கூர்ந்து கண்காணிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். 

டெங்கு காய்ச்சலுக்குத் தேவையான அனைத்து மாத்திரை, மருந்துகள் போதிய அளவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் இருப்பதாகவும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய அளவில் ரத்தம் தயார் நிலையில் இருப்பதாகவும் ஜெயலலிதா தெரிவிததுள்ளார். 

எனவே டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post