Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் போராட்டத்தை இழிவு படுத்தி பேசிய தா. பாண்டியனை கண்டித்து ஆர்பாட்டம் (படங்கள்)



ஒரு வாரத்திற்கு முன் கூண்டன்குலம் அணுஉலை போராட்டத்தை கொச்சை படுத்தும் வகையில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்து இருந்தார் தா. பாண்டியன். 

இந்திய பொதுவுடைமை கட்சி மாநில தலைவர் தா பாண்டியனின் கொடுத்த பேட்டியை கண்டித்து காலை 10 மணிக்கு அசோக்நகர்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.   

ஒரு வாரத்திற்கு முன் கூண்டன்குலம் அணுஉலை போராட்டத்தை கொச்சை படுத்தும் வகையில் " கூடன்குளமோ குருவிக் குளமோ, மின்சாரம் அவசியம் வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார் தா . பாண்டியன். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி நண்பர்கள், வழக்கறிஞர்கள், செயல்பாட்டாளர்கள், படைப்பாளிகள் மற்றும் பலர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தா பாண்டியன் அவர்களை ஒரு கோமாளியாக சித்தரித்து அவர்கள் பதாதை ஏந்தி ஆர்பாட்டம் செய்தனர். அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர் . அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து காவல் துறை அங்கு வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தது. 











படங்கள் உதவி : பூவுலகின் நண்பர்கள்
[vuukle-powerbar-top]

Recent Post