Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உள்ளூராட்சித் தேர்தலில் விருப்புவாக்கு முறை ஒழிக்கப்பட்டது-இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது சட்டத்திருத்தம்

இலங்கையின் உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டம் மற்றும் உள்ளூராட்சி அதிகாரசபை சிறப்பு ஏற்பாட்டுச் சட்டம் என்பன இன்று பிற்பகல் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. 

இதன் மூலம் உள்ளூராட்சித் தேர்தல் முறை முற்றாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

புதிய சட்டத்தின் மூலம் விருப்பு வாக்குமுறை ஒழிக்கப்பட்டு, வட்டார ரீதியாக 60 வீத உறுப்பினர்களும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறையின் கீழ் 40 வீத உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர். 

இலங்கையில் தேர்தலில் விருப்பு வாக்குமுறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வன்முறைகள் அதிகரித்து வந்தன. 

இதன்காரணமாக, விருப்பு வாக்கு முறையை ஒழிப்பதற்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post