Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மின்தட்டுப்பாட்டை சரிசெய்ய குழு - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் நிலவிவரும் கடும் மின்வெட்டை சரிசெய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை கட்டுப்படுத்த சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.இக்கூட்டத்தில் மின்தட்டுப்பாட்டை சரிசெய்ய 9 பேர் குழு ஒன்றை அமைத்துள்ளார் ஜெயலலிதா.மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் இக்குழு செயல்பட்டு மின்தட்டுப்பாட்டுக்கான காரணங்களை களையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் புதிய மின் உற்பத்தி நிலையங்களை உடனே திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post