Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலி - பழனியில் நடந்த சோகம்

தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

பழனி மதீனா நகரைச் சேர்ந்த முகமது ஈசான் மகன் இம்தியாஸ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டு இருந்தான்.இந்த நிலையில் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவன் அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான்.அங்கு சிகிச்சை பலனின்றி நான்கே வயதான சிறுவன் இம்தியாஸ் உயிரிழந்தான்.

மேலும் நாகர்கோவிலில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

[vuukle-powerbar-top]

Recent Post