Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வேட்டைக்காரனாக மாறிய ஆர்யா.


இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் " இரண்டாம் உலகம்" படத்தை பற்றிய சில சுவாரஷ்யமான செய்திகள் நாளுக்கு நாள் வந்த வண்ணமே உள்ளன.அந்த வரிசையில் தற்போது வந்துள்ள செய்தியாக,காட்டிலே மிருகங்களை மிக கொடிய முறையில் வேட்டையாடும் வேடுவனாக மிக புராதானமான ஆதி வாசிகளின் உடையில் நடிகர் ஆர்யா நடிக்கும் காட்சிகள் மிக அண்மையில் இப்படத்திற்காக படமாக்கப்பட்டுள்ளது  பற்றியதாகும்.

காட்டிலே எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் மிக தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக ஸ்காட்லான்ட் நாட்டிற்கு பயணித்துள்ளனர் "இரண்டாம் உலகம்" படக்குழுவினர்.இப்படத்திற்கான  படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் விநியோகம் சம்பந்தப்பட்ட வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.



[vuukle-powerbar-top]

Recent Post